அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2015

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப்பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு இன்ஜி., கல்லூரிகளில், பல பாடப்பிரிவுகளில், உதவிப் பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.

இதில், விழுப்புரம், திருச்சி, திண்டிவனம், தூத்துக்குடி, திருக்குவளை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, நாகர்கோவில், காஞ்சிபுரம், திண்டுக்கல், ஆரணி, அரியலூர் ஆகிய, 13 கல்லூரிகள் மற்றும் கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலை மண்டல கல்லூரிகளில், 112 இன்ஜி., உதவிப் பேராசிரியர்; 15 கல்லூரி நூலகர் பதவி; 11 உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு என, மொத்தம், 138 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கானகல்வித்தகுதி உடையவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விரிவான விவரங்கள், https://www.annauniv.edu/pdf/advt_faculty.pdf என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி