இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள்தேர்வு முகாம் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், ராணுவ வீரர் ஜிடி, ராணுவ வீரர் தொழில்நுட்பம், செவிலியர் உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில், ராணுவ வீரர் ஜிடி மற்றும் டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பும், டிரேட்ஸ்மேன் பதவிக்கு 10-ம் வகுப்பும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு முகாமில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில், 22-ஆம் தேதி தருமபுரி மாவட்டம், 23-ஆம் தேதி மதுரை, 24-இல் மதுரை, திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும்,25-ஆம் தேதி தேனி, 26-இல்தேனி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல்மாவட்டங்களும், 27-இல் கிருஷ்ணகிரி, 28-இல் கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்து கொள்ளலாம்.
எனவே, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விருப்பமுள்ள இளைஞர்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு மேற்காணும் தேதிகளில் அதிகாலை4 மணிக்கு வர வேண்டும்.அனைத்துத் தேர்வர்களும் 1.6 கி.மீ தூர ஓட்டம் மற்றும் உடல் தகுதித்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பின்னரே அவர்களது விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.உடல் தகுதித் தேர்வு பெற்று இருப்பினும், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் ராணுவ ஆள்தேர்வு முகாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நீக்கம் செய்யப்படுவர்.மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி