பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியே பயிற்சி பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது.வல்லுனர் மற்றும் ஆசிரியர் குழுக்கள் இணைந்து, பல ஆண்டுகளின் கேள்வித் தாள் மற்றும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான வினா மற்றும் விடைகள்; தேர்வுக்கு வரும் முக்கிய பாடப்பகுதி; பாடங்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள்; எந்த கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்; எந்தப் பகுதியைப் படித்தால், பாடங்களின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும்.இந்த புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் வழங்கப்படும். மாணவர்கள்நகல் எடுத்துக் கொள்ளலாம்; விற்பனைக்கு கிடையாது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்று பயிற்சி பெட்டகங்களைத் தந்து அவர்களைத் தேர்ச்சியடையச்செய்வது,நல்லதல்ல.வினாக்கள் இதிலிருந்து மட்டுமே கேட்கப்படுவதால் ,மாணவர்கள்,இதனை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். உயர்கல்வி நுழைவிதேர்வில் வெற்றிபெறமுடியாமல் தவிக்கின்றார்கள். உயர் அதிகரிகளோ தேர்ச்சிவிகிதம் அதிகரித்துவிட்டடாகப் புள்ளி விவரங்களைக் காட்டி ஏமாற்றுகிரார்கள்.
ReplyDeleteHmmmm s it's true 😉
ReplyDelete