சென்னை மாநகராட்சியில் 805 காலிப்பணியிடங்கள்: விளம்பரம் செய்து நிரப்ப முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

சென்னை மாநகராட்சியில் 805 காலிப்பணியிடங்கள்: விளம்பரம் செய்து நிரப்ப முடிவு

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 805 பணியிடங்களை நாளிதழ்களில் விளம்பரம்செய்து நிரப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
மாநகராட்சியின் 26 துறைகளில் 805 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்பும்போது வேலைவாய்ப்பு அலுவலக பெயர் பட்டியல் பெறுவது மட்டுமன்றி, 2 நாளிதழ்களில் இது குறித்து விளம்பரம் செய்து நிரப்ப நீதிமன்ற ஆணையை பின்பற்ற அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் படிவம், அறிவுறுத்தல்களை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யலாம் என்பதை 2 நாளிதழ்களில் விளம்பரம்செய்யப்படும்.அதன்பின்னர், தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட நபர்கள் ஆகியோருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்படும்.

மேலும் நேரடி நியமன்கள் நடைபெறுவதை கண்காணிக்க துணை ஆணையர் (பணிகள்), தலைமைப் பொறியாளர் (கட்டடம்), மேற்பார்வை பொறியாளர் (சிறப்பு திட்டம்), செயற்பொறியாளர் (பாலங்கள்), நகர சுகாதார அலுவலர் அல்லது மாவட்ட குடும்ப நலத்துறை துணை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி