தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு

அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.
மறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் கோர்ட்டில் கோரப்பட்டு இருந்தது.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டு மறுதேர்வை நடத்தபோர்டு கமிட்டிக்கு 4 வாரகால அவகாசமும் அளித்து இருந்தது. தள்ளிவைக்கப்பட்டஅகில இந்திய மருத்துவ மாணவர் தேர்வு 25-ந்தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. தேர்வு போர்டு கமிட்டி நேற்று அறிவித்தது. அன்று காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை நாடு முழுவதும் 1,000 மையங்களில் இந்த தேர்வுநடைபெறுகிறது.இந்த தேர்வு ஏற்கனவே தகுதிபெற்றிருந்தவர்களுக்கு மட்டும் நடைபெறும்.

இதுபற்றி தேர்வு எழுதுபவர்களுக்கு ‘இ-மெயில்’ மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ மூலம் முறையாக தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தேர்வு கமிட்டியின் வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தேர்வு கமிட்டி அறிவித்து உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி