பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா அக்கறைதமிழ்நாட்டில் உளள அனைத்து பள்ளிகளும் சுத்தமாக இருக்கவேண்டும், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் கல்வி கற்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார்.இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களின் கழிவறைகள் பழுதடைந்து இருந்தால் அவற்றை சரிசெய்து கொடுக்கவேண்டும் அல்லது கழிவறை இல்லாதிருந்தால் அவற்றை கட்டிக்கொடுக்கவேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கழிவறை வசதி செய்யப்பட்டு வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் இந்த பணி முடிவடைந்துவிட்டது.கருத்தரங்குமேலும் பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற தலைப்பில் சென்னையில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் மற்றும் யூனிசெப் நிறுவனம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது.கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருப்பதை கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் அனைவருக் கும் கல்வி திட்ட தமிழ்நாடு மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி பேசுகையில் கூறியதாவது:-

குடிநீர் வசதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பள்ளிக்கூடத்திற்கு தண்ணீர்போதிய அளவுக்கு வரவில்லை. இருப்பினும் மாணவ- மாணவிகள் அனைவரும் சாப்பிடும்போது கண்டிப்பாக சோப் போட்டுகைகளை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். மாணவ-மாணவிகள் இந்த பணியை சரியாக செய்கிறார்களா? என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்.மேலும் பள்ளிக்கூடங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதாவது அவர்கள் பள்ளிக்கூடங்களை அடிக்கடி ஆய்வு செய்துஉறுதிப்படுத்தவேண்டும். பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த மாணவர்களை மொத்தமாக பயன்படுத்தலாம். ஆனால் தனிப்பட்ட மாணவரையோ அல்லது மாணவியையோ பயன்படுத்தக்கூடாது. ஒரு மாணவர் கழிப்பிடத்தை பயன்படுத்தினால் அவர் அந்த கழிப்பிடத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும்.இவ்வாறு பூஜா குல்கர்னி கூறினார்.தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனிசெப் முதன்மை அதிகாரி ஜாப் சச்சாரியா பேசுகையில் கூறியதாவது:-

விழிப்புணர்வு

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் பல முன்னோடி திட்டங்களை கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்கள் கைகழுவி விட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் சோப் போட்டு கையை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். இந்த நடைமுறையின்படி 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களும் சோப் போட்டு கை கழுவி விட்டு சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.இந்த காரியத்தில் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜேந்திர தத்னு, யூனிசெப் தமிழ்நாடு, கேரளா மாணவர்கள் கைகழுவுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு அதிகாரி அருண் டோபால், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கார்மேகம், பழனிச்சாமி, உஷாராணி, நரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.தொடக்கத்தில் அனைவருக்கும் கல்விதிட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜ முருகன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் என்.காயத்திரி நன்றி கூறினார்.

19 comments:

  1. best wishes for all adtw candidate

    ReplyDelete
  2. remain 30% adw list eppo ,yuvaraj akilan sir ?

    any news sgt kallar appointment ?

    ReplyDelete
  3. hari sir 30% case eppo hearing?

    30%sc sca kku kidaikkuma or bc kkaa?

    ReplyDelete
  4. pithiya valkkaiyai thuvakkiya 454 adw sgt kku vaalththukkal.

    god bless you

    ReplyDelete
  5. adw sgt appointed ....

    இன்னைக்கு நீங்க...

    நாளைக்கு நாங்க...

    ReplyDelete
  6. ithukku ethkku IAS padichutu varanum?

    school clean panra aayaa soonnale pothum.

    innaya nilavarapadi ethanayo govt schoolla

    hm illa

    subject teacher illa

    class room illa

    bathroom illa

    bathroom iruntha thnni illa

    athai paraamarikka aall illa


    book illa

    teaching aids illa

    ivlo een TEACHERS illatha class illaiya?(1 : 30 teacher student ratio irukkanum annal ilaai;)

    theliva english padikkira primary student illa

    ippadi govt school la yum tamilnadu kalvi tharaththayum develope pandra evvalo velaiyum, poruppum iruku.


    anal......



    enna kodumai sir ith


    padam nadathha teacher vacanciya nirappungannu

    ReplyDelete
  7. When can a gvt. Staff take a RL ? Is therr any time limit???? Pls clarify anybody..... probation la RL eduka kudatha??? Is there any g.o ???? Answer me plsssss

    ReplyDelete
    Replies
    1. CL 12days RL 3days எடுக்கலாம்..

      Delete
    2. Calander year 1 year la intha 15days leave edutukalam.. Jan to dec..

      Delete
    3. Sir thanx for ur reply..... Could you please tell me the g.o no. For taking RL in probation period???

      Delete
  8. Tomorro state senioarity case chennai highcourt la varutha sir

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Bc,mbc dept appointment for that 64 person on oct 2014 what happened sir

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Pg assistant green inkla sign pannalama

    ReplyDelete
  13. தமிழ் 6முதல்12 வரை ,சமூக அறிவியல் 6முதல் பத்து வரை ஒவ்வொரு வரியிலும் எவ்வளவு கேள்விகள் எடுக்க முடியுமோ அவ்வளவும் எடுத்து புத்தகமாக உள்ளது தமிழ்Rs90/- சமூக அறிவியல் Rs110/-

    தொடர்பு எண்-9789147161

    ReplyDelete
  14. தமிழ் 6முதல்12 வரை ,சமூக அறிவியல் 6முதல் பத்து வரை ஒவ்வொரு வரியிலும் எவ்வளவு கேள்விகள் எடுக்க முடியுமோ அவ்வளவும் எடுத்து புத்தகமாக உள்ளது தமிழ்Rs90/- சமூக அறிவியல் Rs110/-

    தொடர்பு எண்-9789147161

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி