முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட - TNHSPGTA கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட - TNHSPGTA கோரிக்கை

முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கைதமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
ஆனால் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இதுவரை நடத்தப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமையாசிரியர் பணியிடங்களும் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது.

ஆகவே இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை நடத்தும் பொழுது, 2015-16ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளின் பெயர்களையும் அறிவித்து, அதற்கு தோற்றுவிக்கப்படும் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு , காலி பணியிடங்களை முறையாக அறிவித்து, முதலில் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் என்ற முறையில், ஒளிவுமறைவின்றி, எவ்வித முறைகேடும் இல்லாத வகையில், முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில்நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

இங்ஙனம்
வே.மணிவாசகன்
மாநில தலைவர்TNHSPGTA
ஆர்.செல்வம்,
மாநில செய்தி தொடர்பாளர்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி