திருவள்ளுவர் பல்கலை. உடனடி சிறப்புத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

திருவள்ளுவர் பல்கலை. உடனடி சிறப்புத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உடனடி சிறப்புத் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், கடந்த காலங்களில் பயின்றவர்களில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் உடனடி சிறப்புத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, 6,175 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.இவர்களுக்கான தேர்வு அறை நுழைவுச் சீட்டும் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. இந்தத் தேர்வு சனிக்கிழமை காலை தொடங்கவிருந்தது. இதற்காக, மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். ஆனால், தேர்வு மையங்களில், தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் பலகையில் அறிவிப்புஒட்டப்பட்டிருந்தது. இதனால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுதொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.என்ன நடந்தது... தேர்வு மையங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்த விழுப்புரம்தெய்வானை அம்மாள் கலைக் கல்லூரியில் தேர்வு நடத்துவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, கல்வித் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி