அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2015

அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு.

இனி உங்கள் குழந்தையிடம் அதிகம் படித்தால் நல்ல வேலையுடன், வசதியாகவாழலாம் என்பதுடன் மற்றவர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்றும் சொல்லலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் மற்றும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, அந்நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பள்ளியில் உயர்நிலை கல்வி கற்றவர்கள் மற்றும் கல்லூரி பட்டம் பெற்றவர்களுடன், பள்ளி கல்வியை கூட தாண்டாதவர்களின் வாழ்நாள் பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட விபரங்களை ஆய்வு செய்தபோது பள்ளியில் உயர்நிலை கல்வியை முடித்தவர்களும், கல்லூரி பட்டம் பெற்றவர்களும்அதிக நாட்கள் வாழ்வது தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உயர்ந்த சமூக வாழ்க்கை மற்றும் நல்ல வருமானம், அத்துடன் உளவியல் நலவாழ்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவைதான் என தெரியவந்துள்ளது. இதற்கு நேர் மாறாக பள்ளி கல்வியைக்கூட தாண்டாதவர் குடி, புகை மற்றும் தவறான உணவுமுறை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு விரைவாக உயிரிழந்து விடுகிறார்கள். முறையான கல்வி கற்றிருந்தால் 2010-ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி