ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. முதல்கட்ட ஆய்வுக்கு, 21 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்


.பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐ.சி.டி., திட்டத்தின் கீழ், சிறப்புக் குழுவினர், 2013-14ம் கல்வியாண்டிற்குஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப முறையில், கற்பித்தல் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இம்முறைகளை சிறப்பாக பின்பற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தேசியவிருதுக்கு தேர்வு செய்யவுள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும், 21 ஆசிரியர்கள் முதல்கட்ட ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கடந்த வாரம், சிறப்புக்குழு முன் 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் அவரவரின் கற்பித்தல் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். கோவை மாவட்டத்திலிருந்து தொப்பம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை மணிமேகலை முதல்கட்ட ஆய்வுக்கு தேர்வுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஐ.சி.டி., திட்டத்தில், முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, சிறப்புக்குழுவால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், தேசிய விருது குறித்து அறிவிப்பு வெளியாகும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி