கல்வித்துறையில் தமிழகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

கல்வித்துறையில் தமிழகம்

அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரையில் செயல்படும் தொடக்கப்பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை செயல்படும் நடுநிலைப்பள்ளிகளிலும் மற்றும் 10ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை கவலை அளிப்பதாகவும்,
இதுவே பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி உந்தி தள்ளுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.தமிழகத்தில் 31,173 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரமாகும்..

மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கல்வித்துறை செய்து வருகிறது. குறிப்பாக சீருடை, ஸ்கூல் பேக், காலணிகள் உள்ளிட்ட மாணவர்களின்அனைத்து தேவைகளையும் அரசு அளித்து வருகிறது. இருப்பினும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை முழுமையாக தடுக்க முடியவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் பற்றாக்குறை உள்ளது. இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த விகிதாச்சாரம் பின்பற்றப்படுவதில்லை.தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் பணியாற்றும் பரிதாபம் உள்ளது. இத்தகைய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணும் நிலையே உள்ளது. அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் ஒருவர் தலைமை ஆசிரியர். மற்றொருவர் இடைநிலை ஆசிரியர். இத்தகைய பள்ளிகளில்ஒரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதிலும் ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்தால், ஒரே ஆசிரியரே அந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி