தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும்அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில் இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில் கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடத்தப்பட்டது.
இந்தாண்டு ஜூலை முதல் வாரம் கடந்த பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் அறிகுறி கூட தெரியவில்லை.குறிப்பாக 65 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், 650 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் மாணவர் கல்வி மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சங்க நிர்வாகிகள் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆக.,1ல் ஜாக்டோ சார்பில் நடக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் இப்பிரச்னையையும் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்க்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து பல முறை கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும்அதில் முன்னேற்றம் இல்லை. 15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆக.,1ல் ஆசிரியர்களுடன் அரசியல் கட்சியினர், அமைப்பினர் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டத்தில் இக்கோரிக்கையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி