மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் கே.நல்லதம்பி வெளியிட்ட அறிக்கை:


10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கும் மேற்படிப்புக்கான உதவித்தொகையை அசோக் லைலேண்ட்நிறுவனம் வழங்குகிறது.தகுதியான கனரக வாகன ஓட்டுநர்களின் வாரிசுதாரர்கள், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, அசோக் லைலேண்ட் மற்றும் டிவிஎஸ் உதவித்தொகை திட்டம், அசோக் லைலேண்ட் லிமிடெட், தென் மண்டல அலுவலகம், 3-ஆவதுதளம் கிழக்குப் பகுதி, எண் 1 சர்தார் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி