கவுன்சிலிங்: 1036 ஆசிரியர்கள் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

கவுன்சிலிங்: 1036 ஆசிரியர்கள் விண்ணப்பம்

விருதுநகர்: ""மாவட்டத்தில் இடமாறுதல் கவுன்சிலிங்கில்பங்கேற்க 1036 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்,''என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது:


அரசுமற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இடமாறுதல் ஆன்லைன் கவுன்சிலிங் நாளை (ஆக.12)காலை 9.30 மணிக்கு விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் துவங்கி ஆக.,22 வரை நடக்கிறது. பங்கேற்க மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 34 பேர், <உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர், முதுகலை ஆசிரியர்கள் 248 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 615 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 49 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 30 பேர், ஓவிய ஆசிரியர்கள் 11 பேர், உடற்கல்வி இயக்குனர்கள் இருவர், இசை ஆசிரியர்கள் 4 பேர், தையல் ஆசிரியர்கள் மூன்று பேர்என 1,036 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆக.,26 முதல் 29 வரை ஆசிரியர் பணிநிரவல் கவுன்சிலிங் நடைபெறும்,'என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி