10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு விநியோகம் தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு விநியோகம் தாமதம்

அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கப்படும் அறிவியல் ஆய்வக கையேடு நடப்பு கல்வி ஆண்டில் வழங்குவது தாமதமாகியுள்ளது.கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் புத்தகத்தின் அடிப்படையில், அவர்கள் நடத்தும் பாடங்களுக்கு மட்டும் ஆய்வக பயிற்சி நடந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் ஆய்வகத்திற்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தனி பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது.


அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக வழங்கப்படும் அறிவியல் ஆய்வக கையேட்டில் ஆய்வக வசதிகள், ஆய்வங்களை பயன்படுத்தும் விதம், செய்முறை பயிற்சி குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில்எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

இக்கையேடு நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை வழங்கப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து இடைநிலை கல்வி திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆய்வகம் குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை, மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வசதியாக சில ஆண்டுகளாக அறிவியல் ஆய்வக கையேடு வழங்கப்பட்டது. பாடங்களில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இக்கையேட்டை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி