செவிலியர் பணியிடம்: 5 ஆயிரம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

செவிலியர் பணியிடம்: 5 ஆயிரம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இதுவரை5 ஆயிரம் செவிலியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 பணியிடங்களுக்கு செவிலியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.


அதில், 38,116 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்ந்துள்ள வகுப்பு, மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.செவிலியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது.இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பூர்த்தியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டோர் குறித்த பெயர்ப் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியதாவது:ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் நாள்களில் கலந்து கொள்ளாதவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். சுமார் 7,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி