பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2015

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் பதிவு

வரும் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறவுள்ள பிளஸ் 2 தனித் தேர்வுக்கானவிண்ணப்பத்தை நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்: இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.10.2015 அன்று 16 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு, நேரில் சென்று 13.08.2015 முதல் 19.08.2015 மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவுசெய்துக்கொள்ளலாம். மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவுசெய்தல் குறித்த கூடுதல் அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி