தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் : கணக்கெடுக்கும் பணி தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் : கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் தெரிவிக்கின்றது.அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.பல இடங்களில் தமிழ் வழி கல்வி மட்டுமின்றி ஆங்கில வழி கல்வி பாடத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் நியமனமும்கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த மாதம் இறுதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு நடத்துவதற்கு முன்னதாக காலிப்பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டன.அதில் கடந்த ஆண்டை விட மிக குறைந்த அளவில் தான் ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதும் தெரிய வந்தது.இதற்கிடையில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சார முறையில் கணக்கெடுக்கும் பணியும் கடந்த 1–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

1–8.2015–ன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் எத்தனை பேர் வகுப்பு வாரியாக, பாட வாரியாக பணியாற்றுகிறார்கள், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும், முதன்மை கல்வி அதிகாரிகளிடமும் வழங்கி வருகின்றனர்.இதுவரையில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாவட்டம் வாரியாகஉபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கெடுக்கப்படுகிறது.பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக உள்ளனர். இதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிப்பது பள்ளிகல்வித்துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள் பணி நிரவல் செய்யவும் அதற்கும் மேலாக இந்த எண்ணிக்கை இருந்தால் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆகையால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல், முடிந்த பிறகு தான் இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதுவும் மிகப்பெரிய அளவில் இட மாறுதல் கலந்தாய்வு இருக்காது என்றே கூறப்படுகிறது.

17 comments:

 1. சும்மவே வேலை கொடுக்க மாட்டேன்ங்ராங்க
  இதுல கூடுதலா இருந்தா?

  ReplyDelete
 2. I think this are signs to chang our way from tet to other examination....

  ReplyDelete
 3. Iam balachandran bt social kollapuram at arialur
  metual arialur to thirupur namakkal dindukal call 9843115139

  ReplyDelete
 4. appuram athuku tet exam vaika sole rompa peru kakaraka pokapa poi polapa paruka
  pokada nekalum uka tet .......

  ReplyDelete
 5. athukuda appuram tet exam vaikareka all tet close panukada sami pothum nekalum uka tet.....

  ReplyDelete
 6. appuram athuku tet exam vaika sole rompa peru kakaraka pokapa poi polapa paruka
  pokada nekalum uka tet .......

  ReplyDelete
 7. appuram athuku tet exam vaika sole rompa peru kakaraka pokapa poi polapa paruka
  pokada nekalum uka tet .......

  ReplyDelete
 8. appuram athuku tet exam vaika sole rompa peru kakaraka pokapa poi polapa paruka
  pokada nekalum uka tet .......

  ReplyDelete
 9. Oru private school LA mattum 1500 students athum +1, +2 la mattum.. Anga mattum epdi admission poguthu.. Govt staff lam avanga children ah govt school LA sethanum nu Govt order potta, teaching mm nalla irukkum.. Job mm kedaikkum

  ReplyDelete
 10. மாலை வணக்கங்கள் எனதருமை சகாக்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

  ReplyDelete
 11. This s 100percent true.இந்தக்கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் மிகமிகக் குறைவே.வேலையிலிருப்பவர்களையே பிறத் துறைகளுக்கு மாற்றுப்பணி என பயமுறுத்துகிறார்கள்.எனவே New postings,trb,tet எல்லாவற்றிற்கும் வாய்ப்பு அரிதே..
  ஓர் அரசு ஆசிரியர்

  ReplyDelete
 12. But surplusa irukra candidatesa 50 percent mathalanu solitangalame...

  ReplyDelete
  Replies
  1. Apdidhan solikranga,,26 ku apram dhan therium,

   Delete
 13. Govt, jop venumnu nenaikura namathu teacher's ku eno avarkalin childrens a government school la padikavaika manam ellai enna oru manamketta polapu............

  ReplyDelete
 14. Govt teacher life.e jolly than! Pathutu thane iruken! 99 mark eduthu tet pass aana BT asst group 4m pass panni junior asst aana kadhai.....

  ReplyDelete
 15. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி