தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2015

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் கே.மகரபூஷணம், பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்முன்னாள் மேலாண்மை இயக்குனர் எம்.சந்திரசேகரன், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேந்திரகுமார், தொழில்துறை கமிஷனர் மற்றும் தொழிற்சாலைகள், வர்த்தக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.பேரூராட்சிகள் இயக்குனர் ராஜேந்திர ரத்னூ, பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிரன் குராலா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டில் மேல்படிப்பை முடித்துத் திரும்பியுள்ள காகர்லா உஷா, தமிழ்நாடுநகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை சந்தை மற்றும் வர்த்தக இயக்குனர் சி.மனோகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.வணிகத்துறை முன்னாள் இயக்குனர் மங்கத் ராம் சர்மா மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி