செப்டம்பர் 2-ந்தேதி நடைபெறும் போராட்டம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2015

செப்டம்பர் 2-ந்தேதி நடைபெறும் போராட்டம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் இல்லை

‘‘செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசாங்க ஊழியர்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில், ரெயில்வே தொழிலாளர்கள் கலந்துகொள்ளாமல் ஆதரவு தெரிவிப்பார்கள்’’ என்று தொழிற்சங்க தலைவர் அறிவித்து இருக்கிறார்.


வேலை நிறுத்த போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் நாடு முழுவதும் 3 கோடி மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தை பொறுத்தமட்டில் 1லு லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் (தமிழ் மாநிலக்குழு) பொதுச்செயலாளார் எம்.துரைபாண்டியன் தெரிவித்து இருந்தார்.


ரெயில்வே தொழிலாளர்கள்


இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் போராட்டத்திற்கு ஆதரவு மட்டும் தெரிவிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அகில இந்திய ரெயில்வே ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாக தலைவரும், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளருமான என்.கண்ணையா கூறியதாவது:-நவம்பர் 23-ந்தேதி வேலைநிறுத்தம்ரெயில்வே தொழிலாளர்களை பொறுத்தமட்டில் ரெயில்வே துறையில் தனியார் மயம் கூடாது, வெளிநாட்டு முதலீடு இருத்தல் கூடாது, சம்பள உயர்வு வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே வருகிற நவம்பர் 23-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட உள்ளனர்என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எனவே, செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசாங்க ஊழியர்கள் சார்பில் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ‘ஷிப்டு’களாக வேலை செய்யும் ரெயில்வே தொழிலாளர்கள் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அன்றைய தினம்போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ரெயில்கள் ஓடும்


இதன் காரணமாக செப்டம்பர் 2-ந்தேதி ரெயில் போக்குவரத்து வழக்கம்போல நடைபெறும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி