மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2015

மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.


இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு, மழலையர் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகளை வகுத்து இணையதளத்தில் வெளியிட்டது.இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ''புதிய விதிமுறைகள்வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'மழலையர் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து எங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டி உள்ளது; மனுவாக தாக்கல் செய்கிறோம். அதற்கு,நான்கு வாரம் அவகாசம் தேவை' என, கோரினர்.அவர்கள் கோரிய படி, நான்கு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பின், அரசு தரப்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கலாம். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி