வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது.
இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அரசுவேலைகோரி தங்களது படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன.அதன்படி, ஜூன் மாத நிலவரப்படி அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. அதில், பெண்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆக இருக்கிறது. சிறப்புப் பிரிவின் கீழ் இலங்கை வாழ் மாணவர்கள் 934 பேரும், கலப்புத் திருமணம் செய்தவர்களில் 39 ஆயிரத்து 721 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 719 பேரும் தங்களது பெயர்களைப்பதிவு செய்துள்ளனர்.
வகுப்பு வாரியாக தகவல் வெளியீடு:
வேலைவாய்ப்பு கோரி, பதிவு செய்தவர்களில் வகுப்பு வாரியாகவும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும்,தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி