'ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாணவர்களின் அனைத்துவிதமான கல்வி உதவித்தொகைகளும் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன.
இதற்கு அவர்கள் ஆதார் எண் சமப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை. அவர்கள் குறித்து கணக்கெடுத்து புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவர்களை,சம்பந்தப்பட்ட கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலங்களில் நடக்கும் சிறப்பு முகாமிற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று படமெடுக்க வேண்டும். அதற்கு அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை ஆதாரமாக கொள்ள வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,”என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி