இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி

“பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் பேசினார்.


நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம்,நேற்று சேலத்தில் நடந்தது. இதில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பேசியதாவது:பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மற்றமாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக தேர்ச்சி விகிதம், வியக்கத்தக்கதாக உள்ளது. எனினும், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது.மாணவர்களுக்கும், மாணவியருக்கும் இடையிலான தேர்ச்சி விகிதமும், 10 சதவீதம் வரை, வேறுபாடு உள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யவும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாகஅதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி