அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?

அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.


மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2012ல் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது.நிதி நெருக்கடியால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட செயல்பாடுகள் குறைந்தன; ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன; இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.


இந்நிலையில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி குறைப்பால் இப்பதவி காலியாக உள்ளது. இதற்கான பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை, நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018 வரைஇப்பதவியை நீடிக்கலாம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி