அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்குதல் உட்பட, 14 இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இவற்றை, நேரடியாக பள்ளிகள் மூலமே பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.பாடம் நடத்தும் ஆசிரியர்களே, இந்த பணிக்கும் பயன்படுத்தப்படுவதால், கல்விப் பணி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சங்கத்தின் கிழக்கு சென்னை மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. ஓய்வுபெறுவோருக்கு பதிலாக, புதியவர்கள் நியமிக்கப்படுவதில்லை. அரசின், 14 வகை நலத்திட்டப் பணிகளிலும், ஆசிரியர்களே ஈடுபடுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த பணிகளை கவனிக்க, மாணவர் நலத்திட்ட அலுவலர் என்ற பெயரில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
Aug 18, 2015
Home
kalviseithi
இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?
இலவச திட்டங்களை கவனிக்க மாணவர் நல திட்ட அலுவலர்?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி