'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு

'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி., முகவராக பணிபுரிகிறார்.


மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது பிரிவினருக்கு, 410; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 146; ஆதி திராவிடர் வகுப்பினருக்கு, 95; பழங்குடியினருக்கு, மூன்று மற்றும் பின்னடைவு காலியிடங்கள் என, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பற்றிய, எந்த குறிப்பும் அதில் இடம் பெறவில்லை. சட்டப்படி, 3 சதவீத பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை ஒதுக்கி, புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மாற்று திறனாளிகளுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய, 3 சதவீத இடங்களை, எல்.ஐ.சி., நிர்வாகம் வழங்க தவறி விட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான, 3 சதவீத இடங்களை நிரப்ப, தனியாக விளம்பரம் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி