யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக, கல்வி விவகாரங்களை கவனிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.ஊழல், முறைகேடு, வெளிப்படையான செயல்பாடு இன்மை போன்றவற்றால், யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளன. அதை சீரமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து, ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, யு.ஜி.சி.,யின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான, ஹரி கவுதம் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி, மார்ச் மாதம், மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
* யு.ஜி.சி., அமைப்பையே கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
* பிஎச்.டி.,யில் சேருவதற்கு, தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
* துணை வேந்தர்கள், ஒரு பதவி காலம் மட்டுமேநியமிக்கப்பட வேண்டும்.இந்த பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக, பார்லிமென்டில், சில நாட்களுக்கு முன், எம்.பி., ஒருவரின் கேள்விக்கு, மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி