அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரி செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரி செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம்

அஞ்சல் நிலையங்கள் வாயிலாகவும், சொத்து வரி செலுத்தும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், தற்போது 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தி வருகின்றனர்.


மாநகராட்சி அலுவலகம், இணையதளம், வங்கி ஆகியவற்றின் வாயிலாகவும் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.சொத்து வரி செலுத்துவோர் வசதிக்காக, மாநகராட்சி ஏற்கெனவே அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரியை செலுத்தும் புதிய சேவையைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.முதல் கட்டமாக, சென்னையிலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு கடிதம் வாயிலாக மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து அஞ்சல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: அஞ்சல் நிலையங்களில், தொலைபேசி, மின்சாரக் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், சொத்து வரியையும் வசூலிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறோம்.


மாநகராட்சி அதிகாரிகளுடன் அஞ்சல் துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.சென்னையிலுள்ளவர்களின் சொத்துவரி மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கீழுள்ள சொத்து வரியையும், அந்தந்த அஞ்சல் நிலையங்களிலும் செலுத்தும் வசதியும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. விரைவில் இதற்கான ஒப்புதல் அஞ்சல் துறை வழங்க உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி