ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன. இதில் ஒரே காலியிடத்திற்கு பல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 240 உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பணிநிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகி கூறியதாவது: ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களை தெரிந்தே நியமித்துவிட்டு, தற்போது பணி நிரவல்செய்கின்றனர். பணி நிரவல் நடக்கும் நாளில் முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர், என்றார்.

25 comments:

  1. Tamilnadula porandadhu romba periya thappu. Padichavangalukku velaiyum illai, respectum illai.

    ReplyDelete
  2. I got tranfer last year .Did i eligible to attend this year counseling through spouse priority. Please reply any one, if you know.

    ReplyDelete
    Replies
    1. BT transfer counseling didnot calfare, this year BT Deployment only

      Delete
    2. BT transfer counseling didnot calfare, this year BT Deployment only

      Delete
    3. சார் என்ன சொல்றங்க. அப்ப விண்ணப்பங்கள் வாங்கியது சும்மா தானா????????????

      Delete
    4. சார் என்ன சொல்றங்க. அப்ப விண்ணப்பங்கள் வாங்கியது சும்மா தானா????????????

      Delete
    5. திரும்பவும் வந்துட்டான்டா மாரிமுத்து Psycho

      Delete
  3. Adhigarigal seiyyum thavarukku teachers badhikka padaranga

    ReplyDelete
  4. http://tamil.oneindia.com/news/tamilnadu/child-line-investigation-on-misbehaving-teachers-233812.html

    ReplyDelete
  5. ippadi ellam nadakuthu ????????

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நிச்சயமாக வழக்கு தொடர்ந்தால் உத்திரபிரதேச வியாபம் போன்றதொரு மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது உலகத்திற்கு தெரிய வரும்.

    ReplyDelete
  9. நிச்சயமாக வழக்கு தொடர்ந்தால் உத்திரபிரதேச வியாபம் போன்றதொரு மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது உலகத்திற்கு தெரிய வரும்.

    ReplyDelete
  10. ADMISSION OPEN FOR GOVT. UNIVERSITY

    M.Phil / Ph.D.,
    PART TIME / REGULAR

    CONTACT :
    SRI ANNAMALAIAYAR EDUCATIONAL TRUST,
    GUDIYATTAM & TIRUVANNAMALAI.
    CELL : 9500838334 / 9566572757

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி