சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இம்மாதம் முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.


இந்நிலையில் அரசு ஊழியர்களைப்போல் சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித்திட்ட பணியாளர்களும் இம்மாதத்தில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.


இதுகுறித்த அரசு உத்தரவு:


2010 ஏப்.,19 அன்று அல்லது அதன்பின் பணியில் சேர்ந்த சத்துணவு, குழந்தை மைய அமைப்பாளர், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் சந்தா செலுத்தலாம். இரண்டு ஆண்டுக்கு குறைவாக பணிக்காலம் உள்ளவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கலாம். உடல்நலக்குறைவு, பெண் ஊழியர்களின் பிரசவம், உயர்கல்வி, திருமணம், இரண்டு சக்கர வாகனம் வாங்க, வீடு கட்ட இதில் இருந்து பணம் பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி