தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2015

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் அதிகரிப்பு.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் ஆண்டுக்கு,ஆண்டுஅதிகரித்து வருகிறது&'&'என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.காரைக்குடியில் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது:


ரூ.15லட்சத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணம். ஆறாம் வகுப்பு படிக்கும் சராசரி மாணவர்2-ம் வகுப்பு தொடர் சொற்களை திறம்பட எழுத தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் வரை27சதவீத மாணவர்கள் தனியார்பள்ளியில் பயின்றனர். இன்று35சதவீதமாக உயர்ந்துவிட்டது. அரசு தன் கடமையை சரிவர செய்வதில்லை. ஏழை குழந்தைகள் கூட தனியார் பள்ளியில் படிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் கல்விக்கு நிறைய கொடுக்க வேண்டும். பில்கேட்ஸ் தான் சம்பாதித்ததில் ஒரு பகுதியை மட்டும் தன் மகன்களுக்கு கொடுத்து விட்டு,மீதியை அறக்கட்டளையின் நற்காரியங்களுக்காக செலவிடுகிறார்.வெளிநாட்டில் மட்டுமே இருந்த இந்த முறை,நம் இந்தியாவிலும் பரவி வருகிறது,என்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்,அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி