மத்திய அரசு பணியாளர் தேர்வில் மொபைல் போனுக்கு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

மத்திய அரசு பணியாளர் தேர்வில் மொபைல் போனுக்கு தடை

மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் கலந்து கொள்வோர், மொபைல் போன்,கால்குலேட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வர, மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:


மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலை தேர்வு, வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வோர், மொபைல்போன், கால்குலேட்டர், ஐ.டி., சாதனங்கள், 'புளுடூத்' போன்ற தகவல் தொடர்புசாதனங்களை, தேர்வு நடைபெறும் அறைக்குள் கொண்டு வரக்கூடாது. மீறினால், அடுத்துவரும் தேர்வுகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத, இரு அமர்வுகளிலும், தலா, 40 நிமிடம் கூடுதலாக அவகாசம் அளிக்கப்படும். அவர்கள், தங்கள் சார்பாக தேர்வு எழுதுவோரை அழைத்து வரலாம்.ஆனால், ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை வைத்திருப்போர் மட்டுமே, மாற்றுத் திறனாளிகள் சார்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.அவ்வாறு அனுமதி பெற்ற பின், அவர்களை, மாற்றுத் திறனாளிகள் மாற்றிக் கொள்ளஅனுமதி கிடையாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயலுறவு பணி இந்திய போலீஸ் பணி உள்ளிட்டவற்றுக்கு, மூன்று நிலைகளாக தேர்வு நடைபெறுகிறது.முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறுவோர், மத்திய அரசு பணியில் சேரலாம். முதல் நிலை தேர்வு, தலா, இரண்டு மணி நேரம் வீதம், இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி