மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2015

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.

பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது.


ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது. கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தைதர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு போதுமான உணவு தயாரிக்க முடியாத நிலையை ஏற் படுத்தி விடுவ தால், உன்னதமான மதிய உணவு திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மாநில அரசுகள் கருதுகின்றன.


இதுகுறித்து, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் அருண் ஜெட்லி தலைமையிலான நிதித் துறைக்கு கடிதம் எழுத மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.மதிய உணவு திட்டம் :


* நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 10 கோடிமாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.


* இதற்கான செலவில், 90 சதவீதத்தை, வட கிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களுக்கு, 75 சதவீத செலவுத்தொகையை வழங்குகிறது.


* 2014 - 15ல், 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில், 9,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.


மதிய உணவு திட்டத்தில், பீகாரில், 1.38 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை வழங்க மத்திய அரசு மறுப்பதால், மாற்று முறைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் குழப்பங்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி