நீதிமன்றங்களில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2015

நீதிமன்றங்களில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள 118 காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.வி.ஆர்.தீனதயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:


சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3-ஆவது - 9 பணியிடங்கள், தட்டச்சர் 13, இளநிலை உதவியாளர்கள் 8, ஓட்டுநர்கள் 2, முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் 18,நகல் பரிசோதகர் 1, நகல் எடுப்பவர் 2, அலுவலக உதவியாளர் 20, இரவுக் காவலர்கள் 20, முழு நேர பணியாளர்கள் 25 என மொத்தம் 118 காலி பணியிடங்கள் உள்ளன.


விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியுடையவர்கள் http:ecourts.gov.inindiatamilnaduvellorerecruitment, http:ecourts.gov.invellore, http:ecourts.gov.intnvellore என்ற இணைய தளங்களில் சென்று மேலும் விவரங்களை அறியலாம்.விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர்,632 009 முகவரிக்கு சுயமுகவரி எழுதிய உறையில் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.


விண்ணபப்ங்கள் சுயஒப்பமிட்ட கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஒட்டி, விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், பெயர், தகப்பனார்-கணவர் பெயர், நிலையான முகவரி,வயது, பிறந்த தேதி, கல்வித் தகுதி, கூடுதல் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்றவர் எனில் அதன் விவரம், சாதி, வகுப்பு,சமயம், தேசிய இனம், முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதன் விவரம்,தற்போதைய பணி, தற்போது பணிபுரியும் இடம்,தற்போதைய ஊதியம், காவல்துறையில் வழக்கு ஏதும் நிலுவையில் இருப்பின் அதன் விவரம் ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி