
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சனிக்கிழமை (செப். 5) கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லி பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை (செப்.4) மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் செய்தி செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு இத்தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும் என்று தில்லி அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையின் வளாகத்தில் (பிரஸிடென்ட் எஸ்டேட்) அமைந்துள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வகுப்பு நடத்த உள்ளார்.இந்த வகுப்பு காலை 11.55 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.55 வரை சுமார் ஒரு மணிநேரம் நடைபெற உள்ளது. முதலில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உள்ளார். அதன்பிறகு, தில்லி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.இந்த நிகழ்ச்சியின்போது ஞானோதய் எனும் பள்ளி இதழை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட, அதன் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொள்கிறார்.
மாணவர்கள், ஆசிரியர்களுடன் குடியரசுரத் தலைவர் உரையாடும் நிகழ்வை தூர்தர்ஷன் செய்தி செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் நேரலையாக காலை 11.55 மணி முதல் நண்பகல் 12.55 மணி வரையிலும், பின்னர், பிற்பகல் 1.25 மணி முதல் 1.35 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இதே நிகழ்வு குடியரசுத் தலைவரின் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி