தபால் துறையில் 143 பணியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2015

தபால் துறையில் 143 பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து,அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர் மற்றும் ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொது பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும்.இரு பணிகளுக்கும் கல்வித்தகுதி, 10ம் வகுப்பு; 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.சம்பள விகிதம், 5,200 - 20,200ரூபாய். தொடர்பு கொள்ள, http://www.dopchennai.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பிக்க, அக்., 4ம் தேதி கடைசி நாள்.தனியார் விளம்பரம் வாடகை வீடு, குடியிருப்பு, கார் விற்பனை போன்ற வர்த்தக ரீதியான விளம்பரங்களை, இனி, தபால் நிலையங்களிலும், தனியார் நிறுவனங்கள் செய்யலாம். 'ஏ 4' பேப்பர் சைஸ் அளவிலான விளம்பரத்தை, இரண்டு வாரங்களுக்கு, தபால் நிலையத்தில் விளம்பரப்படுத்த, 1,000 ரூபாய் கட்டணம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி