தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளு டன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெய ராமன் (அதிமுக), இரா.கிரிராஜன், இ.பரந்தாமன் (திமுக), செந் தாமரைக்கண்ணன் (தேமுதிக), தணிகாச்சலம் (காங்கிரஸ்), ஏ.பாக்கியம் (மார்க்சிஸ்ட்), கே.டி.ராகவன் (பாஜக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச் சாவடிகளிலும் செப்டம்பர் 15-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்துவது, வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.


இந்நிலையில் வரைவு வாக் காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு 2 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சக்சேனா தெரிவித்தார்.திமுக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன், ‘‘உயிருடன் உள்ள வாக்காளர் களை இறந்தவர்களாக கருதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர், முகவரி திருத்தம் செய்தல் ஆகிய பணிகளுக்காக 4 சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இந்தப் பணிகளுக்குபோதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் சார்பில் கோரிக்கை மனுவையும் சக்சேனா விடம் கிரிராஜன் அளித்தார்.


இணையதளம் மூலம் விளம்பரம்


பாஜக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும், இணையதளம் மூலம் இந்தப் பணிகளை செய்வது குறித்து அதிக அளவில் விளம்பரப்படுத்த வேண்டும். வாக்குச் சாவடிகள் மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளிலும் இதற்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்” என்று கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், ‘‘வாக்குச் சாவடி களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வாக்குச் சாவடி எண்கள் மாறாமல் இருக்க தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண் டும்.


குறைந்தது 4 சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும், வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளுக்கான மையங்களை அதிகரிக்க வேண்டும், இணைய தளம் மூலமே அனைத்துப் பணி களும் நடக்கும் வகையில் வசதி களை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்குச் சாவடி முகவர்களின் பெயர்களை பெற்று அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் இணையதளம் மூலம் தகவல் களைப் பெறும் வகையில் அவர் களுக்கு தனி பாஸ்வேர்டு வழங்க வேண்டும் என திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி