உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2015

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

1 comment:

  1. அரசு உத்தரவு போட்டாலும், அதை செயல் படுத்த வங்கி மேனேஜர் முன்வரவேண்டும் . அதைத்தான் எல்ல மாணவர்களும் எதிர்பார்கின்றனர் .....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி