8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: ஜெயலலிதா வழங்கினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2015

8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8,184 பணியாளர்கள் தினக் கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சீரமைத்திட தங்கள் பணியினை ஊதிய விகித அடிப்படையில் வரன் முறைப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.இவர்களது குடும்ப சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரியும் பணியாளர்களின் தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 12.8.2014 அன்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.


அதன்படி, இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் (31.7.2014 அன்றுடன்) தொடர்ந்து பணிபுரிந்த 8184 பணி யாளர்களுக்கு பணி வரன் முறை செய்து கால முறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 3 பணியாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆணைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி