விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2015

விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.

ஆசிரியர்கலந்தாய்விற்கு பிறகு விதிகளை மீறி பணி மாறுதல், பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட தொடக்க கல்வித் துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.


இதில் சில ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. பொது கலந்தாய்வு முடிந்து ஓராண்டு வரை ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் வழங்க கூடாது. ஆனால் தேனி மாவட்டத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜப்பார், இதுவரை 18 ஆசிரியர்களுக்கு பணி மாறுதல், பதவி உயர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் குற்றம் சாட்டுகின்றனர். விதிகளை மீறி பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்யகோரி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டதலைவர் பழனிராஜூ, மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் 25 ஆசிரியர்கள் நேற்று மாலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். ஆனால் இரவு 8.30 மணிவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வரவில்லை. இதனால் அலுவலர்கள் அலுவலகத்தை பூட்ட முடியாமல் தவித்தனர்.தகவல் அறிந்து தேனி தாசில்தார் சொரூபராணி, டி.எஸ்.பி., சீமைச்சாமி ஆகியோர் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், "போடி ஒன்றியம், அகமலை நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக கவுன்சிலிங்கில் ஆசிரியர் பிரியா மாறுதலாகி சென்றார்.


இவர் அப்பள்ளியில் பதவி ஏற்று ஒரு வாரத்தில் பெரியகுளம் நகரவை நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றுள்ளார். இதுபோல் 18 பேருக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி மாறுதல், பதவி உயர்வினை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வழங்கி உள்ளனர். பணியிடம் மாறுதலில் பல லட்சம் லஞ்சம் கைமாறியுள்ளது என்றார். தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் பிரச்னை பற்றி விளக்கம் கேட்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், அவர் அலைபேசியை எடுக்க வில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி