கலை விழாவில் கலக்கலாம்: மாணவர்களுக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

கலை விழாவில் கலக்கலாம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை விழா (கலா உற்சவ்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வுஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


போட்டிகள்இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்தப் போட்டிகள் இசை, நடனம், நாடகம், காண் கலை (விஷுவல் ஆர்ட்) ஆகிய நான்கு பிரிவுகளில் நடத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.முதற்கட்டமாக, கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, நான்கு பிரிவுகளிலும் தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.பின், வருவாய் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும்.தேசிய அளவில் வெற்றி பெறுபவருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா, 1 லட்சத்து 25 ஆயிரம்; இரண்டாம் பரிசாக தலா, 75 ஆயிரம்; மூன்றாம் பரிசாக தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.


இதுகுறித்து, திண்டுக் கல் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது:


மாநில அளவில்அவரவர் பகுதிகளில் உள்ள கலைகளில் ஏதாவது ஒன்றை செய்து காண்பிக்கவேண்டும். அக்டோபரில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.இதைத் தொடர்ந்து, சென்னையில் நவம்பர் மாதம், மாநில அளவிலான போட்டிகளும், டில்லியில் டிசம்பர் மாதம், தேசிய அளவிலான போட்டிகளும் நடத்தப்படும்.கலை விழா போட்டிகள் அனைத்தும், 'வீடியோ' எடுக்கப்பட்டு, 'இ புராஜக்ட்' ஆக மாற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி