இணையம் வேகமாக இயங்க‌... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

இணையம் வேகமாக இயங்க‌...

ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா? உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது:


*.நீங்கள் 4ஜி வசதி பயன்படுத்தினால் ஸ்மார்ட்போன்செட்டிங்கில் 4ஜிக்கு பதில் 3ஜி என மாற்றுவதன் மூலம், சிறந்த நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளும்.


*.இணைய வேகத்தை அதிகரிக்கும் செயலிகளை முயன்று பார்க்கலாம். இலவச செயலிகள் தவிர கட்டண செயலிகளும்இருக்கின்றன.


*.ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட தரவுகளை (கேஷ்) சுத்தம் செய்யலாம். ஒரு சில போன்களில் இதற்கான வசதி இருந்தாலும் , சுத்தம் செய்யும் செயலிகளையும்நாடலாம்.


*.இணையவாசிகளின் நற்சான்றிதழ் பெற்ற பிரவுசர்களை பயன்படுத்திப்பார்க்கலாம்.


*.இணையத்தில் உலாவும் முன் பின்னணியில் இயங்கும் செயலிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கலாம்.


*.முக்கியமில்லாத செயலிகளில் ஆட்டோ அப்டேட் வசதியை முடக்கி வைக்கலாம்.


*.பின்னணியில் இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும் செயலிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நோரூட் மற்றும் பயர்வால் போன்ற செயலிகளை இந்த கண்காணிப்பில் உதவுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி