சமூக பாதுகாப்பு துறைக்கு விருது இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

சமூக பாதுகாப்பு துறைக்கு விருது இல்லை

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சமூக பாதுகாப்பு துறையில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என, அரசு தெரிவித்து உள்ளது.ஆசிரியர்தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி வருகிறது.


இந்த ஆண்டு விருதுக்கு, தமிழகத்தில், 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134;மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, 2; மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்கள், 10 பேர், தேர்வு பட்டியலில்இடம் பெற்றுள்ளனர்.சமூக பாதுகாப்புத் துறையிலுள்ள, சிறை மற்றும் நல்வழிப்படுத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருது அறிவிக்கப்படவில்லை.'சமூக பாதுகாப்புத் துறையில், இருவருக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு தகுதியான ஆசிரியர் கண்டறியப்படாததால், பட்டியலில் அத்துறை ஆசிரியர்கள் இடம் பெறவில்லை' என அதிகாரிகள் கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி