தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்குதேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கின்றனர்.


ஆங்கில வழி கல்வியால் மெட்ரிக்., பள்ளிக்கு சென்ற பல மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்தனர். ஆகஸ்ட் 17, 24,31 மற்றும் செப்டம்பர் 7ல் ஆசிரியருக்கு பயிற்சி அளித்தனர். அதை தொடர்ந்து கணிதம், அறிவியல் உபகரண பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு செல்வதால், ஆசிரியர் இன்றி பள்ளிகள் இயங்குகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: செப்டம்பருக்குள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் நிதி திரும்ப சென்றுவிடும்.


இதனால் தொடர் பயிற்சியை6 நாள் மட்டுமே தருகிறோம். இரு ஆசிரியர் பள்ளிகளை பொறுத்த மட்டில் இருவரும் பங்கேற்க வேண்டும். மாதம் முழுவதும் ஒரு ஆசிரியருடன் பள்ளி இயங்குவதால், மாணவர்கள் எந்த ஆசிரியர் கற்றுத்தரும் பாடத்தை கற்பது என தெரியாமல் தவிக்கின்றனர். வரும் 19 முதல் 25 வரை முதல் பருவ தேர்வு நடக்க உள்ளது. இந்நேரத்திலும் பயிற்சி வழங்குகின்றனர்,'' என்றார்.

2 comments:

  1. Totally SSA money waste....PAAdam nadatha vidungappa.....

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் அப்படித்தான் நடக்கும்.தலைஎழுத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி