மாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2015

மாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் மற்றும் ஊர்தி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னுரிமை பெற்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 35 வயதுக்கு உள்பட்ட 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிம்ம் பெற்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல், ஊர்தி உதவியாளர் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் அளிக்கப்படும். இப்பணியிடத்திற்கு முன்னுரிமை பெற்ற ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 30 வயதிற்குள்பட்டவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், சான்றிதழ், குடும்ப அட்டை நகல்களை இணைத்து விண்ணப்பம் எழுதி பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி