ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2015

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,' என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012--14 வரை 885வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வுவாரியம் 2014 ஜூலை 14 ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.

தனி நீதிபதி,' 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2014 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல்பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்;ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.

19 comments:

  1. என் ஆசிரியர் சொந்தங்களே நாம் 2014, 2015 ம் ஆண்டுக்குறிய காலிப்பணியிடங்களை உடனடியாக அறிவித்து பணிநியமணம் செய்ய வலிய்ய்றுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்க உள்ளோம் ...

    உங்களின் கருத்தை தெரிவிக்க

    ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...

    மாநில தலைவர் செல்லத்துரை - 9843633012
    மாநில செயலாளர் கபிலன் - 9092019692


    Share More TET - Candidates

    ReplyDelete
  2. Waitage LA neeinga veelai illathinga

    ReplyDelete
  3. Hello mr balu,rajlingam kattayam ellarum varuvangu 1st date sona dane ellaru engo oruedathule velaiku poinu erupangu mun kute sonna dane leave keka mudeyum

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. I am also ready sir. My friendsum kutitu varen. Enga eppo. Please tell me Sir

    ReplyDelete
  7. தயவு செய்து போராட்டம் நடத்த இவர்களை நம்பி போராட்டம் செய்ய வேண்டாம் இவர்கள் ஏதோ அமைப்பு பெயர் சொல்லி தவறான செயல்களில் ஈடுபடுகின்றன

    ReplyDelete
  8. வழக்கு முடியும் வரை அனைவரும் அமைதியாக இருந்தால் போதூம்

    ReplyDelete
  9. இவர்கள் பற்றி தெரியாமல் ஆவேச பட வேண்டாம. போண நட போராட்த்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. Ethum nallathu nadakka kudathu... Athu tha unga asai... Apdiye nadakatum.... Ivlo nal wait panni oru puniyam illa.. Case mudiyum varai wait pannuvom.. Aparm poraduvom

      Delete
  10. Case erundal enna Court ve solletche court ku utpattu thevapatta asiyargale neya mekkala antu ana enda govt tha gommanu eruku poradenal velai kedaka vaipu eruku

    ReplyDelete
  11. நல்லது நடக்கதான் வழக்கு போட்டு போராடீ கொண்டு உள்ளோம்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி