பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குபாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2015

பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குபாராட்டு

மாவட்ட அளவில் பொதுதேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கள்ளக்குறிச்சியில் நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கலெக்டர் லஷ்மி தலைமை தாங்கினார். எம்.பி., காமராஜ், எம். எல்.ஏ., அழகுவேலுபாபு முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., மார்ஸ் வரவேற்றார்.


கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பாட வாரியாக 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைச்சர் மோகன் கலந்து கொண்டு, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உறுதுணையாக இருந்த 333 ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற 43 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, டி.இ.ஓ., தனமணி வாழ்த்துரை வழங்கினர்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, நகர் மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அரசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.மேலும், மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள கலைப்பிரிவு பாடங்களான பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு உ<ள்ளிட்ட 4 பாடங்களுக்கு சிறப்பு வினா விடை புத்தகங்கள் 6,000 மாணவர்களுக்கு இலவசமாகவழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி