ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2015

ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு

ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி (புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.


இந்த கடைகள் அனைத்தும் புதன்கிழமை அதிகாலை 6 மணி முதல் மறுநாள் (வியாழக் கிழமை) காலை 6 மணி வரை மூடப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்தியா முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 700 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் தினமும் ரூ.55 கோடிக்கு மருந்து விற்பனையாகிறது. கடை அடைப்பினால் கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி