வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2015

வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம், தண்டையார்பேட்டை எம்பிடி விளையாட்டு அரங்கில் நடத்துகின்றன.


இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது விவரங்களை (www.tnvelaivaaippu.gov.in) என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி